பழம்பெரும் தேவாலய தீ விபத்து: பிரான்ஸில் தன்னார்வலர் கைது!

Monday, July 20th, 2020

பிரான்ஸின் நன்டெஸ் நகரில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக 39 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ருவாண்டன் அகதியான இவர், தேவாலயத்தின் தன்னார்வலராக பணிபுரிந்து வருவதாகவும் தீ விபத்து இடம்பெறுவதற்கு முதல்நாளான வெள்ளிக்கிழமை இரவு, இவரே தேவாலயத்தில் கடமையில் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீவிபத்து குறித்து அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கடும் போராட்டத்துக்குப் பின்னர் தீயணப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். இந்த தீயினால் ஆரம்பத்தில் அஞ்சிய அளவுக்கு மோசமான சேதம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், இந்த தீ,  திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிஸில் உள்ள நோட்ரே-டாம் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் இழப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் ஒரு வருடத்திற்குப் பின்னர் இவ்வாறு தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts: