மேற்குலக நாடுகளால் ரஷ்ய மசகு எண்ணெய்க்கு அதிபட்ச விலை நிர்ணயம் – ஏற்றுமதி செய்யப்போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 5th, 2022

ரஷ்யாவின் மசகு எண்ணெய்க்கு அதிகபட்ச விலை பீப்பாவொன்றுக்கு 60 அமெரிக்க டொலர்கள் என ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன நிர்ணயம் செய்துள்ளன. ஆனாலும் இந்த விலைக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்போவதில்லை என ரஷ்யா கூறியுள்ளது

இதேவேளை இன்று திங்கட்கிழமைமுதல் இந்த விலை நிர்ணயம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகள் அதிகபட்சமாக பீப்பாகவுக்கு 60 டொலர்களையே செலுத்த முடியும்.

யுக்ரைன் மீதான யுத்தத்துக்கு பயன்படுத்துவதற்கு ரஷ்யா நிதி திரட்டுவதை தடுக்கும் நோக்குடன் எண்ணெய் விற்பனை மூலம் ரஷ்யாவுக்கு கிடைக்கும் வருமானத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரானஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியன அடங்கிய ஜி7, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றினிடையே இதற்காக இணக்கப்பாடு கடந்த வெள்ளிக்கிழமை எட்டப்பட்டது.

இந்த விலைக்கட்டுப்பாடானது ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் மிக முக்கிய வருமான மார்க்கத்தை உடனடியாகப் பாதிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லன் கூறியுள்ளார்.

இந்த விலைக்கட்டுப்பாட்டுத்  தீர்மானத்தை யுக்ரைன் வரவேற்றுள்ளது. எனினும் விலை 30 டொலர்களாக குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என யுக்ரைன் கூறியுள்ளது,

ஆனால், இந்த விலைக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்போவதில்லை என ரஷ்யா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: