பலம்­வாய்ந்த எதிர்க்­கட்சி!

Sunday, May 22nd, 2016

தமி­ழக சட்­ட­சபை வர­லாற்­றி­லேயே முதல் முறை­யாக அசுர பலத்­துடன் அதா­வது 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்­கட்­சி­யாக தி.மு.க. அம­ரு­கி­றது.

தமி­ழக சட்­ட­சபை தேர்­தலில் அ.தி.மு.க. 134 இடங்­களில் வென்று ஆட்­சியை தக்க வைத்துக் கொண்டது. தி.மு.க. 89, காங்­கிரஸ் 8, இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்தில் வென்­றுள்­ளது. தமி­ழக சட்­ட­சபை வர­லாற்றில் இது­வரை இல்­லாத வகையில் முதல் முறை­யாக பல­மான எதிர்க்கட்­சி­யாக 89 எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க அம­ரு­கி­றது.

1952 ஆம் ஆண்டு காங்­கிரஸ் கட்சி 162 இடங்­களில் வென்று ஆளும் கட்­சி­யாக அமர்ந்­தது. அத்தேர்தலில் 62 இடங்­க­ளுடன் இந்­திய கம்­யூனிஸ்ட் எதிர்க்­கட்­சி­யாக அமர்ந்­தது

1957 ஆம் ஆண்டு 151 இடங்­களில் வென்­றது காங்­கிரஸ் கட்சி ஆட்சி அமைத்­தது. தி.மு.க. 15 இடங்களுடன் எதிர்க்­கட்­சி­யாக அமர்ந்­தது. 1962 இல் 139 தொகு­தி­களை காங்­கிரஸ் கைப்­பற்ற, தி.மு.க. 50 இடங்­க­ளுடன் எதிர்க்­கட்­சி­யாக இருந்­தது.

1967 இல் 137 இடங்­களை தி.மு.க. வென்று முதல் முறை­யாக அரி­யா­ச­னத்தில் அமர்ந்­தது. அப்­போது காங்­கிரஸ் கட்சி 51 தொகு­தி­களில் வென்ற காங்­கிரஸ் எதிர்க்­கட்சி வரி­சையில் அமர்ந்­தது. 1971 இல் தி.மு.க. 184 தொகு­தி­களில் வெல்ல காங்­கிரஸ் 15 இல் மட்­டுமே வென்று பிர­தான எதிர்க்­கட்­சி­யாக உட்­கார்ந்­தது.

1977 இல் 130 தொகு­தி­களைக் கைப்­பற்றி அ.தி.மு.க. முதல் முறை­யாக ஆட்­சியில் அமர, தி.மு.க. 48 இடங்­களில் வெற்றி பெற்று எதிர்க்­கட்­சி­யா­னது. 1980 இல் 129 தொகு­தி­களில் அ.தி.மு.க. வெல்ல 37 இடங்­களில் வென்ற தி.மு.க. எதிர்க்­கட்­சி­யா­னது. 1984 இல் அ.தி.மு.க. 132 இடங்­களில் வென்ற போது காங்­கிரஸ் கட்சி 61 இடங்­க­ளுடன் எதிர்க்­கட்­சி­யா­னது

1989 இல் தி.மு.க. 150 இடங்­களில் வெல்ல 27 தொகு­தி­க­ளுடன் அ.தி.மு.க. முதல் முறை­யாக எதிர்க்கட்சி வரி­சையில் அமர்ந்­தது. 1991 இல் அ.தி.மு.க. 164 தொகு­தி­களில் வென்­ற­போது காங்­கிரஸ் கட்சி 60 இடங்­க­ளுடன் எதிர்க்­கட்­சி­யாக அமர்ந்­தது.

1996 இல் 173 தொகு­தி­களில் தி.மு.க. வெல்ல, தமிழ் மாநில காங்­கிரஸ் கட்சி 39 தொகு­தி­க­ளுடன் எதிர்க்­கட்சி வரி­சையில் உட்­கார்ந்­தது. 2001இல் அ.தி.மு.க. 132 இல் வெல்ல, தி.மு.க. 31 இடங்­களைப் பெற்­றது. 2006 இல் தி.மு.க. 96இல் வெல்ல, அ.தி.மு.க. 61 இடங்­க­ளுடன் எதிர்க்­கட்­சி­யா­னது

2011 இல் அ.தி.மு.க. 150 இடங்­களில் வென்ற நிலையில், தே.மு.தி.க. 29 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்­சி­யாக அமர்ந்­தது. தற்­போ­தைய தேர்­தலில் அ.தி.மு.க. 134 இடங்களில் வென்ற நிலையில், திமுக 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றிலேயே மிக வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க. தற்போது அமருகின்னமை குறிப்பிடத்தக்கது.

Related posts: