இந்தியாவையும் ஆட்டங்காணச் செய்தது கொரோனா – கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் பலி!

Saturday, April 11th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 40 பேர் உயிரிழந்ததோடு 1574 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 7,447 கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 239 மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்களுக்கு இந்தியா முடக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்கின்றனர். மேலும் பசியுடனேயே பெரும்பாலான மக்கள் நித்திரைக்கு செல்வதாக நிவாரண அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சுமார் 472 மில்லியனுக்கு அதிகளவான குழந்தைத் தொகையை கொண்டுள்ள இந்தியாவில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 40 மில்லியன் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து - ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ...
ஜெனீவாவில் தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும் - பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்ச...
குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி - நாடு முழுவதும் சமுர்த்தி வங்கிக...

அன்பளிப்பு பொருள்கள் பெறுவதை அரச ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் - இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழ...
குடாநாட்டில் படையினரின் பாவனையில் இருந்த மேலும் ஒரு தொகுதி பொது மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு
பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக இருக்க முடியாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...