பிரித்தானியா வெளியேறுவதில் தொடரும் சிக்கல்!

Thursday, March 9th, 2017

ஐரோப்பி ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த மசோதா பிரித்தானியா பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது.

கடந்த 1ம் திகதி பிரித்தானியா விலகுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்ட மசோதாவை பிரித்தானியா பிரதமர் தெரசா மே பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் தாக்கல் செய்தார். மசோதா மீது நடந்த விவாதத்தில் இறுதியில் ஓட்டெடுப்பில் தோல்வியடைந்தது.

பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறி மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இம்மசோதா பிரபுக்கள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் மசோதா மீது 3 மணி நேர விவாதம் நடந்தது. இறுதியில் அதுவும் ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது.

இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

Related posts: