அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா -அச்சத்தில் உலக நாடுகள்!

Wednesday, January 5th, 2022

அடையாளம் தெரியாத ஏவுகணை என வர்ணிக்கப்படும் எறிகணையை வடகொரியா கடலுக்குள் ஏவி பரிசோதித்துள்ளது என தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏவப்பட்டதை முதலில் அறிவித்த ஜப்பானிய கடலோர காவல்படை, இது ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என கூறியுள்ளது.

இதேநேரம் 2021 முதல் வட கொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணைகளை சோதித்து வருகின்ற நிலையில் சமீபத்திய பரிசோதனை மிகவும் வருந்தத்தக்கது என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத சோதனைகள் மற்றும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள வடகொரியாவிற்கு ஐ.நா தடை விதித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட குறித்த பரிசோதனை உறுதிப்படுத்தப்பட்டால், இந்த ஆண்டு பியோங்யாங்கால் மேற்கொள்ளப்படும் முதல் ஏவுகணை பரிசோதனையாக இது இருக்கும்.

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் ஸ்திரமற்ற இராணுவ சூழல் காரணமாக, வடகொரியா தனது பாதுகாப்பை தொடர்ந்து பலப்படுத்தும் என கிம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: