ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் – அவுஸ்திரேலியாவிடம் லட்வியா வேண்டுகோள்!

Monday, August 8th, 2022

ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடு என அவுஸ்திரேலியா அறிவிக்கவேண்டும் என   லட்வியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கை திங்கட்கிழமை சந்தித்துள்ள லட்வியாவின் வெளிவிவகார அமைச்சர்  எட்கார் ரிங்கெவிக்ஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது அவர் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்த தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன் மேற்குலகம் ஆயுத உதவியை அதிகரிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்வியாவின் அவுஸ்திரேலியாவிற்கான முதலாவது தூதரகத்தை ஆரம்பிப்பதற்காக கான்பெராவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எட்கார் ரிங்கெவிக்ஸ் உக்ரைனில் தொடரும் பாரிய மனித உரிமை மீறல்கள் அநீதிகள் காரணமாக ரஸ்யாவிற்கு எதிரான தடைகள் அவசியம் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவியளிக்கும் நாடாக அறிவிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்டுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது நீதி;க்கான சர்வதேச நீதிமன்றம் உள்ளது ஆனால் ஆக்கிரமிப்பு குற்றம் இந்த நீதிமன்றங்களின் வரையறைக்குள் வரவில்லை ஆகவே நாங்கள் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும்,ரஸ்யாவின் யுத்த குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு நாங்கள் தீர்வை காணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: