பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் – பங்களாதேஷ் அரசுக்கு எதிராக வலுப்பெறும் போராட்டம்!
Monday, July 31st, 2023
பங்களாதேஷில் மீண்டும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றுள்ளது
பங்களாதேசின் தலைநகர் டாக்காவில், நேற்று பங்களாதேஷின் பிரதான எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
அதன்போது, சமுக செயற்பாட்டாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் எனவும், அடுத்த பொதுத் தேர்தல் வரை, கட்சி சார்பற்ற இடைக்கால அரசாங்கத்திற்கு அதிகாரத்தை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி அங்கு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜேர்மனியில் குண்டுத் தாக்குதல் - தாக்குதல்தாரி பலி!!
65,000 ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷில் தஞ்சம்!
பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் பதிவுகள்: 36 வீடுகளில் பொலிசார் அதிரடி சோதனை!
|
|
|


