65,000 ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷில் தஞ்சம்!

Wednesday, January 11th, 2017

மியன்மார் இராணுவம் பதற்றம் கொண்ட ரகினே மாநிலத்தில் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை அரம்பித்தது தொடக்கம் குறைந்தது 65,000 ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இதில் மூன்றில் ஒரு பங்கினர் கடந்த ஒரு வாரத்திற்குள் சென்றவர்கள் என்று ஐ.நாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ஐ.நா நிவாரண அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கடந்த வாரத்தில் 22,000 பேர் எல்லை கடந்து பங்களாதேஷை அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் எல்லை முகாம்கள் மீது கடந்த ஒக்டோபரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே மியன்மார் இராணுவம் ரகினே மாநிலத்தில் படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது. இராணுவம் அத்துமீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் பங்களாதேஷ் தப்பிவந்திருக்கும் துன்புறுத்தலுக்கு உள்ளான முஸ்லிம் சிறுபான்மையினர், தம் மீதான கொலை, கற்பழிப்பு மற்றும் தீ வைப்பு தாக்குதல்கள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பட்டவை என்று மியன்மார் அரசு மறுத்து வருகிறது.

coltkn-01-11-fr-04151753583_5150537_10012017_MSS_GRY

Related posts: