முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடாமல் நிறுத்தி வைப்பு!

Wednesday, October 19th, 2016

ஏற்கெனவே திட்டமிட்டபடி, கனடாவோடு கையெழுத்தாக இருந்த அடையாள முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதை லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் கைவிட்டுள்ளனர்.

விவசாயிகளின் சலுகைகளை குறைக்கும், தொழிலாளர் நலன்களை இல்லாமல் ஆக்கும் என்ற கவலைகளின் மத்தியில் இந்த ஒருங்கிணைந்த வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தை (அல்லது சிஇடிஎ -ஐ) பெல்ஜியத்தின் ஐந்து அதிகாரப் பரவல் செய்யப்பட்ட நாடாளுமன்றங்களில் ஒன்று தடுத்து வருகிறது.

இந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் வகையிலான வேலைகள், அடுத்த வாரத்தின் இறுதியில் பிரஸல்ஸில் நடைபெறுகின்ற கையெழுத்திடும் நிகழ்விற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமான டிக்கெட்டை வாங்கும் தருணம் வரை, தொடரும் என்று ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையாளர் சிசிலிய மேலம்ஸ்டோம் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் நெருக்கிய நட்பு நாட்டோடு மேற்கொள்ளப்படும் நல்லதொரு ஒப்பந்தம் என்று அவர் கூறிய இந்த ஒப்பந்தத்தில், கையெழுத்து இடாமல் போய்விட்டால், இது மோசமானதொரு அறிகுறியாக இருக்கும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

_91975818_0a2450a7-e3a8-4dc7-bab4-9015c0696f4b

Related posts: