ஒருவருக்கு 5 கிலோ இலவச அரிசி!

Sunday, October 30th, 2016

ஒருவர் மட்­டுமே உள்­ள குடும்­பத்­திற்கு மாதம் 12 கிலோ அரி­சியும், 2 பேர் மட்­டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் 16 கிலோ அரி­சியும் தற்­போது உள்­ளது போலவே தொடர்ந்து வழங்­கப்­படும்.

5 நபர்கள் உள்ள குடும்­பத்­திற்கு இனி 20 கிலோ­வுக்கு பதி­லாக மாதம் 25 கிலோ அரி­சியும், 7 நபர்கள் உள்ள குடும்­பத்­திற்கு 25 கிலோ அரி­சியும், 10 பேர் உள்ள குடும்­பத்­திற்கு மாதம் 50 கிலோ அரி­சியும் வழங்­கப்­படும் என தமிழக அரசு அறி­வித்­துள்­ளது.

இந்த சட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதால் அர­சுக்கு ஆண்­டுக்கு 1,193.30 கோடி கூடுதல் செல­வாகும் என்று தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்து தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக்­ குறிப்பில், மத்­திய அரசு, தேசிய உணவு பாது­காப்பு சட்­டத்­தினை தமி­ழ­கத்தில் உட­ன­டி­யாக அமுல்படுத்துமாறும், அவ்­வாறு அமுல்­ப­டுத்த தவ­றினால் தற்­போது வறுமைக் கோட்­டிற்கு மேல் உள்ள குடும்­பங்­க­ளுக்­கென வழங்­கப்­படும் அரி­சியின் விலை­யினை கிலோ ஒன்­றுக்கு ரூ.8.30 என்பதிற்கு பதிலாக ரூ.22.54 என்ற விலையில் மட்டுமே வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளது.

rice42354-28-1477623662

Related posts: