பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் சிறுமி உயிரிழப்பு!
Tuesday, July 18th, 2017
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய எல்லைமீறிய தாக்குதலில் 7 வயதான சிறுமி ஒருவரும் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பூஞ்ச் பகுதியிலுள்ள இந்திய இராணுவ முகாம்களை குறிவைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தான் இராணுவம் நடத்திய மோட்டார் ஷெல் தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு இரு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதோடுஇ பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அத்தோடு ரஜோரி மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடுஇ எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்களில் சிலர் ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் !
ஜெயலலிதா கச்சதீவை மீட்பார்- ஸ்டாலின் நம்பிக்கை!
எதிர்காலம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அரச தலைவர்கள் கூடி ஆராய்வு!
|
|
|


