பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் !

Friday, April 22nd, 2016

பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அவர்களில் ஒரு லெப்டினண்ட் ஜெனரல், ஒரு மேஜர் ஜெனரல் ஆகியோரும் அடங்குவர். எனினும் குறிப்பாக என்னென்ன குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் பதவி நீக்கப்பட்டனர் என்பது வெளியிடப்படவில்லை.

பதவி நீக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் பலோச்சிஸ்தானில், துணைஇராணுவப்படையின் முன்னரங்கு பிரிவுகளில் பணியாற்றி வந்தனர். பாகிஸ்தானில் ஊழலை முற்றாக ஒழிக்கும்வரை தீவிரவாதத்துக்கு எதிரானப் போரை வெல்ல முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீஃப் தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரிகளின் பதவி நீக்க நடவடிக்கை வந்துள்ளது. முன்னதாக பதினொரு இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு, இப்போது திரும்பிப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: