எதிர்காலம் குறித்து  ஐரோப்பிய ஒன்றிய அரச தலைவர்கள் கூடி ஆராய்வு!

Sunday, March 12th, 2017

பிரித்தானியா இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

ரோம் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியடைவதை இந்த மாதம் இறுதியில் கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் பிரசல்ஸில் அவசரமாகக் கூடிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த பத்து ஆண்டுகால செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்கு பிரித்தானியா பிரதமர் திரேஷா மே யை ஒதுக்கிவைத்த நிலையிலேயே இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற தீர்மானித்துள்ளதால் பிரித்தானியா இல்லாத ஐரோப்பிய ஒன்றியம் குறித்தே இன்றைய தினம் தலைவர்கள் விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர்.

இதன்போது ஐரோப்பிய நாடுகளில் பாரிய அரசியல் நெருக்கடிக்கு வித்திட்டுள்ள குடியேறிகளின் வருகை தொடர்பிலும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகள் தொடர்பிலம் ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

குறிப்பாக அண்மைக்காலமாக கடும்போக்கு வலதுசாரிக் கொள்கையுடைய அரசியல் கட்சிகள் அரசியலில் செல்வாக்கு பெற்று வருவது குறித்தும் அதற்கு மகம்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தேர்தல்களில் கடும்போக்கு வலதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்கள் என்றுமில்லாத அளவிற்கு மக்களின் ஆதரவை பெற்றுள்ளமையே இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.

Related posts: