பாகிஸ்தானின் கோரிக்கைக்கு உதவ மறுத்தது ஜேர்மனி!

Thursday, August 27th, 2020

ஜேர்மனியிடம் நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உதவியை ஜெர்மனி  வழங்க மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீர்மூழ்கிக்கப்பல்கள் நீருக்குள் வலம் வந்தாலும், 2 நாளுக்கு ஒருமுறையாவது கடலின் மேற்பரப்புக்கு வரவேண்டிய நிலை ஏற்படும். எனினும்  Air Independent Propulsion எனும் தொழிநுட்பம் மூலம் வாரக்கணக்கில் நீர்மூழ்கி கப்பல்கள் கடலின் மேற்பரப்புக்கு வருவதைத்  தவிர்க்க முடியும்.

இந் நிலையில் குறித்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தனது நீர்மூழ்கிக்கப்பல்களை தரம் உயர்த்தும் நோக்கத்தில், பாகிஸ்தான் ஜேர்மனியின் உதவியை நாடியுள்ளது.

எனினும் ஜேர்மனியின் பிரதமர் அஞ்ஜலா மேர்க்கெலின் தலைமையிலான பாதுகாப்புக்குழு பாகிஸ்தானுக்கு உதவ மறுத்துள்ளது.

2017ஆம் ஆண்டு  காபூலிலுள்ள  ஜேர்மன் தூதரகத்தில் குண்டு வைத்தவர்களை பாகிஸ்தான் தண்டிக்க தவறியமையே, உதவி மறுத்தமைக்குக்  காரணமெனத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: