நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைவு!.

Friday, March 8th, 2024

நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது. யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஸ்வீடன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர விண்ணப்பித்திருந்தது.

விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதற்கான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேட்டோ இன்று முன்னரை விட வலுவாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ இன்னும் ஒன்றுபட்ட, உறுதியான மற்றும் ஆற்றல் மிக்கதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது புதிய நட்பு நாடான ஸ்வீடனுடன் சேர்ந்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக எதிர்வரும்; தலைமுறைகளுக்காக நேட்டோ தொடர்ந்து நிற்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - பிரித்தானிய சுகாதாக செயலாளர் மெட் ஹென்கொக் தெரிவ...
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - நாடு முழுவதும் சிறுவர் நீதிமன்றங்களை உருவாக்க துரித நடவட...
அரசியலமைப்புச் சபையால் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு - ஜனாதிபதி ...