நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – பிரித்தானிய சுகாதாக செயலாளர் மெட் ஹென்கொக் தெரிவிப்பு!

Saturday, May 2nd, 2020

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பிரித்தானியாவில் சுமார் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் பேருக்கு கொவிட் 19 வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு சுகாதாக செயலாளர் மெட் ஹென்கொக் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் தற்போது 1 இலட்சமாக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், துல்லியமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்காக ஒரு நபருக்கு பல தடவைகள் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டி உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு இலட்சத்து 77,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 27,510 பேர் குறித்த தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: