பிரபல பாடகர் யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருது!

Thursday, January 26th, 2017

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான `பத்ம` விருதுகளை இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

பத்ம விபூஷண் விருதுகள் , ஜேசுதாஸைத் தவிர, ஆறு பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இஷா யோகா மையம் என்ற நிறுவனம் நட்த்திவரும் ஜக்கி வாசுதேவுக்கு ஆன்மிகத்துறையில் ஆற்றிய சேவைக்காகவும், அரசியல்வாதிகள் சரத் பவார் ( தேசிய காங்கிரஸ் கட்சி), முரளிமனோகர் ஜோஷி ( பாஜக), மறைந்த அரசியல்வாதிகள், சுந்தர்லால் பட்வா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா ஆகியோருக்கு பொது சேவைக்காகவும் , பேராசிரியர் உடுப்பி ராமச்சந்திர ராவுக்கு விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறைகளிலும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு இலக்கியம் மற்றும் கல்வித்துறைகளில் ஆற்றிய சேவைக்காக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

மொத்தம் 7 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 65 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

_93804539_drkjyesudas.com

Related posts: