இந்திய கடற்படைக்காக 3,500 கோடியில் 2 போர்க் கப்பல் கட்ட முடிவு!

Wednesday, November 21st, 2018

இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் – ரஷ்யாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் இடையே 3,500 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 2 போர்க் கப்பல்களை கட்டுவதற்கு இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

குறித்த இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க் கப்பல்களும் கட்டப்படும். இதற்காக வடிவமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் சில உபகரணங்களை ரஷ்ய நிறுவனம் அளிக்கும்.

இதுபற்றி கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சேகர் மிட்டல் கூறும்போது, “இந்திய கடற்படைக்காக இந்த 2 போர்க் கப்பல்களும் கட்டப்படுகின்றன. கப்பல் கட்டும் பணி 2020 ஆம் ஆண்டு தொடங்கும். முதல் கப்பல் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். மற்றொரு போர்க்கப்பல் 2027 ஆம் ஆண்டு இணைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Related posts: