மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிய நோயாளி: பொலிசார் அதிரடி !

Friday, July 29th, 2016

ஜேர்மனியிலுள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் இருந்து தப்பிய நோயாளி ஒருவர் வணிக வளாகம் ஒன்றிற்குள் புகுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு ஜேர்மனியில் உள்ள Bremen நகரில் மனநல மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. பொலிசாரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக 19 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த மருத்துவமனையில் கடந்த ஞாயிறு அன்று அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், நேற்று காலை நேரத்தில் மருத்துவமனையில் அந்த மனநோயாளி தப்பிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மனநோயாளி தப்பியபோது அவரை பிடிப்பதற்காக மருத்துவர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, ‘என்னை நெருங்கினால் கொன்றுவிடுவேன்’ என மனநோயாளி மருத்துவரை கடுமையாக எதிர்த்துள்ளார்.

சில மணி நேரங்களுக்கு பிறகு நகரில் உள்ள Weserpark என்ற வணிக வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை பெற்ற பொலிசார் மாலை 7 மணியளவில் வளாகத்தில் உள்ள 170 கடைகளையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.மேலும், மனநொயாளி வெடிப்பொருட்களை பதிக்கியுள்ளாரா என தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

நீண்ட நேரத்திற்கு பிறகு, நள்ளிரவு 12.35 மணியளவில் மனநோயாளியை பொலிசார் கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வணிக வளாகத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிசார் அறிவித்ததும் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

Related posts: