சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு – நாடு முழுவதும் சிறுவர் நீதிமன்றங்களை உருவாக்க துரித நடவடிக்கை!

Wednesday, July 21st, 2021

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது சிறுவர் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும், ஒன்பது சிறுவர் உயர் நீதிமன்றங்களையும் நிறுவும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவர், சட்டத்தரணி சுஜாதா அலஹபெருமா தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஊடகங்களின் சமூக தாக்கம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் பத்தரமுல்ல மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒன்பது சிறுவர் உயர் நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசார...
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டபய ரா...
நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் இடம்பெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பிப்ப...