நீல கலர் உடை அணிய தடை விதித்தது  வடகொரியா!

Monday, September 12th, 2016

மது மற்றும் இணைய சேவைகளுக்கு தடை விதித்துள்ள வட கொரியா அடுத்த அதிரடியாக பொதுமக்கள் நீல நிற ஜீன்ஸ் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வட கொரியாவில் பொதுமக்கள் மது அருந்தவும் இணைய சேவைகளை பயன்படுத்தவும் அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் தடை விதித்துள்ளார். மட்டுமின்றி தொலைக்காட்சிகளில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பவும் அங்கு கட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில் கிம் ஜோங் விடுத்துள்ள அடுத்த அதிரடி உத்தரவு என்பது அங்குள்ள பொதுமக்கள் நீல நிற ஜீன்ஸ் அணிந்துகொள்ளவும், கடைகளில் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளதே.ஆனால் கறுப்பு வண்ணத்தில் ஜீன்ஸ் அணிய தடையில்லை என கூறும் அந்த தடை உத்தரவு, அதற்கு உரிய காரணத்தையும் நாட்டு மக்களுக்கு விளக்கியுள்ளது.

நீல வண்ண ஜீன்ஸ் என்பது அமெரிக்க சர்வாதிகாரத்தை உணர்த்துவதாக இருப்பதால் இந்த தடை உத்தரவு என தெளிவுபடுத்தியுள்ளது.வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளவைகளின் பட்டியல் மிக நீளமானது. அங்கு எவரும் அத்துணை சீக்கிரத்தில் வாகன உரிமையாளர் ஆக முடியாது. பொதுமக்களில் பலருக்கும் அங்கு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி அரசு தெரிவு செய்துள்ள 28 சிகையலங்கார மாதிரிகளில் ஒன்றை மட்டுமே பொதுமக்கள் தெரிவு செய்ய வேண்டும்.மதரீதியான சடங்குகளுக்கும் அங்கு கட்டுப்பாடுகள் அதிகம். கட்டுப்பாடுகளை மீறுபவருக்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட்டு வருகிறது வட கொரியாவில்.

jeans-stil-1

Related posts: