டிரம்பிற்கு சிவப்பு கம்பளம் விரிக்க மாட்டோம் –  இலண்டன் மேயர் !

Wednesday, July 19th, 2017

பிரித்தானிய தலைநகரான இலண்டனுக்கு அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் வருகை புரிந்தால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க மாட்டோம் என இலண்டன் மேயர் சாதிக் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டொனால்ட் டிரம்ப் விதித்தை லண்டன் மேயர் சாதிக் கான் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்தார்.சாதிக் கானுக்கு பதலடி தரும் வகையில் டொனால்ட் டிரம்பும் அவரது நிர்வாகத்தை குறை கூறி விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், பிரித்தானிய நாட்டிற்கு வருகை தருமாறு டொனால்ட் டிரம்பிற்கு பிரித்தானிய பிரதமரான தெரசா மே அழைப்பு விடுத்துள்ளார்.

இதுக் குறித்து சாதிக் கான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, ‘ஒரு நாட்டு தலைவரின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து அவரை விருந்தினராக அழைப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும்.ஆனால், இஸ்லாமியர்களுக்கு மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டொனால்ட் டிரம்ப் பிரித்தானிய நாட்டிற்கு வருகை தரக்கூடாது.

ஒருவேளை, டிரம்ப் பிரித்தானிய நாட்டிற்கு வந்தாலும் கூட, அவருக்கு நாங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க மாட்டோம் என சாதிக் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் அழைப்பு விடுத்துள்ள நிலையிலும், அந்நாட்டில் டொனால்ட் டிரம்பிற்கு அதிகளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் பிரித்தானியாவிற்கு செல்லும் திகதியை இதுவரை வெள்ளை மாளிகை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: