கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் சிறு பகுதி இயற்கையை ஏய்த்துவிட்டது – பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகத் தலைவர்களால் நிதி ஒதுக்கீடு!

Sunday, December 3rd, 2023

‘COP28’பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவனக் கருத்தரங்கு நேற்றுமன்தினம் ஆரம்பமான நிலையில் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகத் தலைவர்கள் நிதி ஒதுக்கியுள்ளனர்.

இரண்டு வாரங்கள் நடைபெறவிருக்கும் மாநாட்டின் தொடக்கமாக இரு நாள் உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உட்பட, உலக நாடுகளின் தலைவர்கள் ஏறக்குறைய 140 பேர் அதில் கலந்துகொள்கின்றனர்.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க தங்கள் நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தலைவர்கள் அதில் எடுத்துரைப்பர்.

புதுப்பிக்கப்படும் எரிசக்தி முதலீடுகள், புதிய நிதி ஒதுக்கீடுகள், உலகளாவிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள அழைப்பு விடுத்தல் போன்ற அம்சங்கள் குறித்து அவர்கள் எடுத்துக்கூறுவர்.

அதில் கலந்துகொள்ளும் உலக நாடுகளின் பேராளர்கள், உலகை பாதுகாப்பான பாதையில் வழிநடத்துவதன் தொடர்பில் இணக்கம் காண முனைந்துள்ளனர்.

படிம எரிபொருளிலிருந்து மாற்று எரிசக்திக்கு மாறுவதற்கான தெளிவான திட்டங்களை அந்த உடன்படிக்கை வரையறுக்க வேண்டியது அவசியம். பசுமை எரிசக்தி முதலீடுகளை விரைவுபடுத்துவதும் கட்டாயம்.

குறிப்பாக ஏழை நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் தொடர்பில் அந்த உடன்பாடு தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், ஏழை நாடுகள் பல, படிம எரிபொருள்களையே பெரிதும் சார்ந்துள்ளன.

வெளி ஆதரவு இல்லாமல் அந்த நாடுகள் பசுமை எரிசக்திக்கு விரைவாக மாறுவதற்கான பண வசதி அவற்றுக்கு இல்லை.

‘COP28’ கருத்தரங்கில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையது, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் தீர்வுகளுக்கான ‘அல்டெர்ரா’ நிதிக்கு, 30 பில்லியன் அமெரிக்க டொலர் ($40 பில்லியன்) வழங்க உறுதியளித்தார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் 1.6 பில்லியன் பவுண்டுகள் ($2.7 பில்லியன்) நிதி வழங்க உறுதி தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டுக்குள் 250 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை ஊக்குவிப்பது இதன் இலக்காகும்.

கருத்தரங்கின் முக்கிய இலக்குகளுக்கு ஏற்ப, 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி பயன்பாட்டை மும்மடங்கு அதிகரிக்க இந்தியா ஆதரவு தந்துள்ளது.

“ஒரு நூற்றாண்டாக பணக்கார நாடுகள் மேற்கொண்ட பொருளியல் மேம்பாட்டுத் திட்டங்கள் ஏழை நாடுகளுக்குப் பாதகமாகவே அமைந்ததாகக் கூறிய அவர், “சென்ற நூற்றாண்டின் தவறுகளைச் சரிசெய்ய நமக்கு அதிகம் காலமில்லை. கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் சிறு பகுதி இயற்கையை ஏய்த்துவிட்டது

திடமாக முடிவெடுத்து நாம் வெற்றிபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்திய அவர், 2028ஆம் ஆண்டு ‘சிஓபி33’ கருத்தரங்கை இந்தியா ஏற்றுநடத்தும் என்றார்.

கருத்தரங்கில் உரையாற்றிய பிரேசில் அதிபர், புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

நியாயமான முறையிலும் விரைவாகவும் அதைச் செய்தே ஆகவேண்டும்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

‘அல்டெர்ரா’ நிதியிலிருந்து, இந்தியாவில் 6 கிகாவாட் திறன்கொண்ட எரிசக்திக் கட்டமைப்பு, காற்றாலை, சூரியசக்தித் திட்டங்கள் ஆகியவற்றுக்காக நிதி வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: