பழிக்கு பழி: 4 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் கறுப்பின நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து எழுந்த போராட்டத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மினிசோட்டா மாகாணத்தில் நேற்று காதலனை பொலிசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை அவரது காதலி நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து மாகாணம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பொலிசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் நேற்று இரவு 8.45 மணியளவில் போராட்டம் வலுப்பெற்றபோது பொலிசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.
ஆனால், தூரத்தில் இருந்து தாக்கும் ஸ்னைபர் துப்பாக்கியால் சுட்டதில் டல்லாஸ் பொலிசார் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். போராட்டக்களத்தில் 4 பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மேலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் உயர் அதிகாரி டேவிட் புரவுன் பேசியபோது, ‘இச்சம்பவம் தொடர்பாக துப்பாக்கியுடன் இருந்த நபர் ஒருவரையும் அவர் அருகில் இருந்த பெண் ஒருவரையும் கைது செய்துள்ளோம். சில இடங்களில் அவர்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக டேவிட் புரவுன் தெரிவித்துள்ளார்.
கறுப்பின நபரை பொலிசார் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து 4 பொலிசார் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
பயங்கரவாதத்திற்கு அடிபணியோம்: பிரஸ்ஸல்ஸில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!
அமெரிக்காவை அடுத்து தற்போது ரஷ்யாவில் கொரோனா தாண்டவம் – உலகில் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 இலட...
இறையாண்மைக்கு பாதகம் ஏற்பட்டால் ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் - எச்சரிக்கை விடுத்துள்ளார் விளாடிமிர் ப...
|
|