அமெரிக்காவை அடுத்து தற்போது ரஷ்யாவில் கொரோனா தாண்டவம் – உலகில் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்தது!

Friday, May 8th, 2020

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யாவிலேயே தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய ரஷ்யாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் அந்த நாட்டில் புதிதாக 88 பேர் இந்த தொற்றால் பலியாகியுள்ளதற்கு அமைய உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை, அமெரிக்காவிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்தவாறே காணப்படுகிறது.

அந்த நாட்டில் இந்த தொற்றால் புதிதாக 2 ஆயிரத்து 109 பேர் பலியாகியுள்ளதுடன் அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் அங்கு புதிதாக 29 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதி செய்யப்பட்டுள்ளதற்கு அமைய அமெரிக்காவில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 92 ஆயிரத்து 212 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட்19 தொற்றால் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக நேற்றைய தினம் பிரேசிலில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

அந்த நாட்டில் இந்த தொற்றால் புதிதாக 600 பேர் பலியாகியுள்ளதுடன் கொரோனா வைரசால் உயிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரேசிலில் புதிதாக 8 ஆயிரத்து 435 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதற்கமைய அந்த நாட்டில் மொத்தமாக இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதேவேளை, தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரசால் இந்தியாவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் இந்த தொற்றால் 104 பேர் பலியாகியுள்ளதுடன் இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் அங்கு புதிதாக 3 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இந்தியாவில் இதுவரை மொத்தமாக இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கமை உலகலாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றால் இதுவரை பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 70 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் உலகலாவிய ரீதியில் இதுவரை 39 இலட்சத்து 12 ஆயிரத்து 588 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 13 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: