சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையை டிக்டொக் நிறுவனத்திடம் கோரிய ஐரோப்பிய ஒன்றியம்!

Tuesday, April 23rd, 2024

சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது.

குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம் தவறும் பட்சத்தில், டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், காணொளிகளை பார்ப்பதற்காக பயனர்களுக்கு பணம் செலுத்தும் புதிய செயலி குறித்த மேலதிக தகவல்களை வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

டிக்டொக் செயலியை பயன்படுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.  பாதுகாப்பு காரணிகள் காரணமாக குறித்த தடையை, இந்தியா அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: