இரட்டை குடியுரிமை விவகாரம்: பதவியை விலகிய அவுஸ்திரேலிய அமைச்சர்!

Thursday, July 27th, 2017

இரட்டை குடியுரிமை விவகாரத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய Resource அமைச்சர் Matt Canavan தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவுஸ்திரேலிய நாட்டு சட்டப்படி இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட முடியாது.

இந்நிலையில், Matt Canavan இத்தாலிய குடியுரிமை பெற்றவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதுகுறித்து கூறிய Matt Canavan, 2006 ஆம் ஆண்டு இத்தாலி குடியுரிமை வேண்டி பிரிஸ்பேனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் எனது தாய் விண்ணப்பித்தார்.

அப்போது எனது வயது 25. குடியுரிமை கோரி அவர் விண்ணப்பித்ததை தவிர வேறு எவ்வித தகவலும் எனக்கு தெரியாது, அதுகுறித்த விண்ணப்பங்கள் எதிலும் நான் கையெழுத்திடவில்லை.

தற்போது, எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேனே தவிர, நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் இருக்கிறேன். இரட்டை குடியுரிமை பற்றிய சட்டப்பூர்வ விளக்கங்களை தெளிவாக அறிந்துகொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.

இரட்டைக்குடியுரிமை விவகாரத்தால் பதவியை ராஜினாமா செய்யும் மூன்றாவது அவுஸ்திரேலிய அமைச்சர் இவராவார். முன்னதாக நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாக அறியப்பட்ட இருவர், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: