பதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்!
Thursday, May 23rd, 2019
கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தெரசா மே- இன் Brexit திட்டத்திற்கு எதிரான ஒரு பின்னடைவின் மத்தியில், ஹவுஸ் ஆப் காமன் தலைவர் ஆண்ட்ரியா லட்ஸம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Brexit விவகாரமானது தற்போது பரபரப்பான சூழ்நிலையை எட்டியிருக்கும் நிலையில், பிரித்தானியா அமைச்சர் ஆண்ட்ரியா லட்ஸம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் அனுப்பியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான தெரசா மே- இன் Brexit திட்டம் மீது தான் நம்பிக்கை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் தெரசா மே – இன் கீழ் 35 அமைச்சர்கள் பதிவியை ராஜினாமா செய்திருப்பதும், அதில் Brexit விவகாரம் தொடர்பாக 21 பேர் ராஜினாமா செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேஸ்புக் நிறுவனத்துக்கு 5 லட்சம் பவுண்ட் அபராதம்!
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு!
கொரோனா தொற்று: நிலைமை மோசமடைந்தால் பிரித்தானியாவில் புதிய அறிவுறுத்தல்!
|
|
|


