நியூஸிலாந்து பல்பொருள் அங்காடியில் பதற்றம்- உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!

Friday, September 3rd, 2021

நியூஸிலாந்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூஸிலாந்தின் – ஒக்லண்ட் நகரில் அமைந்துள்ள லீன்மால் என்ற பிரபல பல்பொருள் அங்காடியிலேயே இன்று இந்த துப்பாகிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறப்பு அங்காடியில் இருந்த ஆறு பேரை திடீரென கத்தியால் குத்தி காயப்படுத்திய நிலையிலேயே இலங்கையர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால்  சுட்டுக்கொல்லப்பட்டார்.

அங்காடியி்ல் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு 6 செக்கனுக்குள் தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் 2011 ஆம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என நியுசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் 5 ஆண்டுகளாக அந்நாட்டு அரசாங்கத்தின் கண்காணிப்பிற்குட்பட்டிருப்பதாகவும், இதுவொரு பயங்கரவாத தாக்குதலாகும் எனவும்  நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆடெர்ன் தெரிவித்துள்ளார்.

Related posts: