சிரியாவில் இன்று போர் நிறுத்தம்?

Monday, September 12th, 2016

சிரியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான ஒப்பந்தத்தால் இன்று ஆரம்பிக்கவுள்ள போர் நிறுத்தத்தில் கலந்து கொள்வது குறித்து சிரியா போராளி குழுக்கள் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போர் நிறுத்தத்தையும், உதவிகள் விநியோகிக்கப்படுவதையும் வரவேற்பதாகவும் ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மற்ற அம்சங்கள் குறித்து தங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளதாகவும் அலெப்போவில் உள்ள போராளி குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வலிமையான போராளிக்குழுக்களில் ஒன்றான அஹ்ரார் அல் ஷாம் இந்த ஒப்பந்தத்தை முற்றாக நிராகரிக்கலாம் எனத் தெரிகிறது. அதிபர் பஷார் அல் அசாத்தின் முக்கிய ஆதரவாளரான இரான், இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், பரந்துபட்ட கண்கானிப்பு வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களில் சிரியா மற்றும் ரஷிய விமானங்களின் வான் தாக்குதல்கள் தொடருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமையன்று நடைபெற்ற வான் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

160910150138_syria_idlib_640x360_afp

Related posts: