மீனவர் பிரச்சினைக்கு நிலையான தீர்வு – சுஷ்மா ஸ்வராஜ்!

Thursday, March 23rd, 2017

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியான தீர்வு பெற்றுத் தரப்படும் என்று இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு தமிழக மீனவர்கள் சிலர் அமைச்சரைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டார். கச்சதீவு கடற்பகுதியில் கடந்த ஆறாம் திகதி மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினரே சுட்டுக் கொன்றதாக மீனவர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக மீனவர்கள் குழுவொன்று சந்தித்தது. இச்சந்திப்பின்போது கொல்லப்பட்ட பிரிட்ஜோவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படவேண்டும் என்றும் அமைச்சரிடம் மீனவர் குழு கோரிக்கை விடுத்தது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் பற்றி இலங்கை அரசுடன் கலந்துரையாடி சட்ட ரீதியான அதேநேரம் நிலையான தீர்வொன்றை விரைவில் பெற்றுத்தருவதாகவும் இலங்கையால் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும்இ அவர்களது கப்பல்களையும் விடுவிப்பதற்கான முழு முயற்சிகளையும் தாம் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் கொல்லப்பட்ட மீனவர் தொடர்பில் இலங்கை அரசு விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தமிழக மீனவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: