திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது

Thursday, April 21st, 2016

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

மத்தியம் பிரதேசம், போபாலில் ‘இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேட்டிவ் இன்ஜினியர்ஸ்’ அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி கடந்த மார்ச் 25-ம் தேதி நடந்தது. இதில் ‘சோலார்’ கார்கள் பங்கேற்றன. திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் கண்டுபிடித்த ‘சோலார் காரும்’ இதில் பங்கேற்றது

இந்த பேட்டரி காரில் மொத்தம் எட்டு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு பேனலிலும் தலா 50 வாட்ஸ் சோலார் மின்சாரம் தயாராகி பேட்டரியில் சேமிப்பாகும். பின், 400 வாட்ஸ் மின்சாரத்தைக் கொண்டு மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் கார் இயங்கும். இதற்காக 1,500 ஆர்.பி.எம். திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் கார் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டது. உயர்தர கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கியர் பாக்ஸ்’ தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டது. இந்த வசதியால் வேகத்தை உடனடியாக கூட்டவும், குறைக்கவும் முடியும்.

இந்த சோலார் கார் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தேசிய அளவில் 12-வது இடத்தையும் பெற்றது. மேலும் சிறந்த வடிவமைப்பிற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது. இதேபோன்று இந்த மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக முன்பே தயாரித்த சுற்றுச்சூழல் பாதிக்காத ‘இ பைக்’கும் தேசிய அளவில் முதல் பரிசு  பெற்றுள்ளது.

சோலார் காரை கண்டுபிடித்த மாணவர்களுக்கு உதவிய, உதவி பேராசிரியர்கள் மும்மூர்த்தி, விவேக்குமார் கூறுகையில், “இதுபோன்ற இயற்கை சூழலை மாசுபடுத்தாத கண்டுபிடிப்புகளுக்கு கல்லூரிகள் மாணவர்களுக்கு உதவ வேண்டும்” என்றனர்.

dincar01

Related posts: