வடகொரியாவின் முக்கிய அதிகாரி அமெரிக்கா விஜயம்!

Thursday, May 31st, 2018

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் வலது கை முக்கிய அதிகாரியான ஜெம் கிம் யொங்-சொல் அமெரிக்காவை சென்றடைந்துள்ளார்.

வடகொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

வடகொரியாவின் அதிமுக்கிய சிரேஷ்ட அதிகாரியான இவர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையில் எதிர்வரும் ஜுன் மாதம் 12ம் திகதி சந்திப்பு நடைபெறவிருந்த போதும், அதனை ரத்து செய்வதாக முதலில் டொனால்ட் ட்ரம்ப்அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் இரண்டு தரப்பும் இந்த சந்திப்பை மீள ஒழுங்கு செய்ய இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts: