2020 ஒலிம்பிக் போட்டி: அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவு !

Tuesday, December 17th, 2019


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்மாக இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் அதற்கான அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவடைந்துள்ளமையை அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே பாராட்டியுள்ளார்.

60 ஆயிரம் பேர் அமரக்கூடிவாறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கத்திற்காக 1.44 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வு, இறுதி நிகழ்வு மற்றும் தடகள போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

அடுத்த வருடம் ஜூலை 24 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: