ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு சிறை தண்டனை!

Thursday, December 13th, 2018

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற விசாரணையில், தாம் பொய் கூறியதாக தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன்க்கு 03 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புடன் பாலியல் உறவில் இருந்ததாக கூறப்பட்ட பெண்களை சமாதானப்படுத்துவதற்காக இரகசியமாக பணம் தந்த விவகாரத்தில் தாம் ஈடுபட்டதாகவும் அதன் மூலம் நிதி தொடர்பான சட்டங்களை மீறிவிட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் ஒப்புக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று(12) இடம்பெற்ற விசாரணையில் அவர் குற்றவாளியாக இனம்காணப்பட்ட நிலையில் அவருக்கு 03 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts: