ஈராக்கின் மறுசீரமைப்பிற்கு 2 பில்லியன் டொலர் வழங்கும் குவைத்!

Saturday, February 17th, 2018

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்ட்ட ஈராக்கின் மறுகட்டமைப்புக்காக குவைத் அரசு 2 பில்லியன் டாலர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக் நாட்டின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு 2014-ம் ஆண்டில் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையடுத்து அங்குள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசல்களை சேதப்படுத்திய ஐ.எஸ். இயக்கத்தினர் பெரும்பாலான மக்களையும் கொன்று குவித்தனர்.

அவர்களுக்கு எதிராக சர்வதேச உதவியுடன் களமிறங்கிய ஈராக் அரசுப்படையினர் கடந்த ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துவிட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து, போரில் சிதிலமடைந்த நகரங்களை மறுகட்டமைக்கும் பணியை தற்போது மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்காக, குவைத்தில் நன்கொடையாளர் மாநாடு நடந்தது. அதில், ஈராக்கில் மறுகட்டமைப்புக்கு மட்டும் 88.2 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் கட்டுவதே முதன்மை இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: