ஜப்பானில் நிலநடுக்கம் !

Tuesday, May 9th, 2017

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தென் பகுதியிலுள்ள தீவுப் பகுதியான மியாகோவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கடல் அலையில் மாறுதல் ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உடனடி பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை.

Related posts: