விலங்குகளுக்கான முதல் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா!

Wednesday, March 31st, 2021

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்ட புதிய தடுப்பூசி, விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான பெடரல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது
மேலும் ஆரம்பகட்ட சோதனைகளின் போது இது எந்த பக்க விளைவுகளையும் காட்டவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கிய கார்னிவாக்-கோவின் மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள், பூனைகள், முயல்கள், ஆர்க்டிக் நரிகள்,; மற்றும் பிற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசி பாதிப்பில்லாதது என்ற முடிவுக்கு வர உதவியதுடன் விலங்குகள் மற்றும் அதிக நோயெதிர்ப்பு செயல்பாடுகளைக் வெளிக்காட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ், அவுஸ்திரேலியா, போலந்து, கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்கனவே கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: