Leggings அணிந்து விமானத்தில் பயணிக்க தடை!

Friday, March 31st, 2017

அமெரிக்க விமான சேவை நிறுவனமான யுனைடட், இரண்டு பெண் பயணிகள், லெகின்ஸ் (Leggings) எனப்படும் உடையை அணிந்திருந்ததால், அவர்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்தது குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஞாயிறன்று டென்வரிலிருந்து மினியாபொலிசுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அந்த பெண்கள், விமான சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்களுக்கான சிறப்பு பயணச் சீட்டில் பயணம் செய்ததாகவும் அதற்கு ஆடை விதிகள் இருப்பதாகவும் யுனைடட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது

மேலும் பிற பயணிகள் லெகின்ஸ் (Leggings) அணியலாம் என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த பெண்கள் “ஊழியர்கள் அல்லது அவர்களின் உறவினர்களுக்கான பயணச் சீட்டு பயணிகள்” என இது குறித்து டிவிட்டரில் ஏற்பட்ட விவாதத்தில் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: