இந்தியா – இத்தாலி இடையிலான உச்சி மாநாடு: புதிய உலகத்துக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் – இந்தியா பிரதமர் மோடி பேச்சு!

Saturday, November 7th, 2020

இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகள் இடையிலான உச்சி மாநாடு நேற்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் கியூசெப் காண்டேவும் கலந்துகொண்டு இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், கொரோனா வைரசின் மோசமான தாக்கத்தை சமாளிக்கும் வழிகள் குறித்தும் விவாதித்தனர்.
மாநாட்டில் பிரதமர் மோடி, “கொரோனா தொற்றானது, 2-ம் உலக போரை போலவே வரலாற்றில் ஒரு நீரோட்டமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. நாம் அனைவரும் இந்த புதிய உலகத்துக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். தொற்றுநோயால் எழும் சவால்களுக்கும் வாய்ப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்” என கூறினார்.
மேலும் 2018-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த மோடி, இந்தியா- இத்தாலிக்கு இடையேயான உறவு சமீபகாலங்களில் வேகமாக வலுவடைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: