சோமாலியாவில் இராணுவ தளபதி பலி!
Monday, September 19th, 2016
சோமாலியா தலைநகர் மொகதிஷுவில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், இராணுவ தளபதி ஒருவரும் மற்றும் அவரது பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.
இராணுவ தளபதி முகமது ஜிமாலே கூபாலேவின் வாகன தொடரணி மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிப்பொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்கச் செய்தார்.இந்தத் தாக்குதல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருந்த பகுதி அருகே நடைபெற்றுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலை அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.தங்களுக்கு எதிராக தளபதி திட்டம் ஒன்றை வகுத்ததின் விளைவாக இது நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related posts:
அந்தமான் அருகே காற்றழுத்தம்: இது புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!
ஜேர்மனில் குடியேற்றவாசிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரிப்பு!
வெளிநாட்டில் 222 இலங்கையர்கள் உயிரிழப்பு - பலர் தற்கொலை!
|
|
|


