ஜேர்மனில் குடியேற்றவாசிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரிப்பு!

Tuesday, February 28th, 2017

ஜேர்மனியில் உள்ள குடியேற்றவாசிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஜேர்மனிய உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வின் போது கடந்த வருடத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு 10 குடியேற்றவாசிகள் தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வகையில் ஜேர்மனியில் கடந்த வருடம் தாக்கப்பட்ட குடியேற்றவாசிகளில் 43 குழந்தைகளும் உள்ளடங்குவதாக குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

குடியேற்றவாசிகள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியே உள்ள சந்தர்ப்பங்களிலேயே அவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய தாக்குதல்கள் அவர்கள் தங்கிருக்கும் முகாம்கள் அல்லது வரவேற்பு மையங்களுக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் மற்றும் ஏனைய காரணங்களால் தங்களது நாட்டை விட்டு வெளியேறி ஏனைய நாடொன்றிற்கு செல்லும் குடியேற்றவாசிகளுக்கு ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் இருப்பிடம் அளிக்க ஆரம்பித்ததை தொடர்ந்து அங்கு அரங்கேறும் இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0110

Related posts: