வீரப்பனை கொன்றது எப்படி?

Tuesday, June 7th, 2016

சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி என்பது குறித்து அவரை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார் புத்தகம் எழுதி வருகிறார்.

வீரப்பனுக்கு எதிரான வேட்டையை தலைமை தாங்கி வழிநடத்திய அப்போதைய சிறப்பு அதிரடிப்படை தலைவர் விஜயகுமார், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தெளிவான, சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதற்காகவே இந்த புத்தகத்தை எழுதி வருகிறேன் என்றார்.

இது எனது நேரடி அனுபவம் நிறைந்த புத்தகம். உண்மையான தகவல்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக, சிலரது பெயர்களை குறிப்பிடாமல் விட்டிருக்கிறேன். மற்றபடி, அனைத்து தகவல்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் வனப்பகுதிகளில் 20 ஆண்டுகளாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன்.

பொலிஸ், வனத்துறையினர் உட்பட 180 பேரை கொலை செய்ததாகவும், 200க்கும் மேற்பட்ட யானைகளை கொன்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தியதாகவும் வீரப்பன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கு ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2004ம் ஆண்டு ஒக்டோபர் 18ம் திகதி, வீரப்பன் தனது கண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அவரை வீரப்பன் கும்பலில் இருந்த பொலிஸ்காரர், காட்டை விட்டு வெளியே அழைத்து வந்து, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்தில் ஆம்புலன்ஸ் போல் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வேனுக்கு கூட்டி வந்தார்.

வீரப்பனும், கூட்டாளிகளும் ஆம்புலன்சில் ஏறி அமர்ந்தவுடன், அப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

சரண் அடைந்து விடுமாறு முதலில் எச்சரிக்கை விடுத்தை பொருட்படுத்தாத வீரப்பன் கூட்டாளிகள், துப்பாக்கியால் சுடவே அதிரடிப்படையினரும் துப்பாக்கியால் திருப்பி சுட்டனர்.

அதில், சம்பவ இடத்திலேயே வீரப்பன் பலியானார். அவருடைய கூட்டாளிகள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தனர்.

Related posts: