உலகளாவில் 65 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Wednesday, June 3rd, 2020

கொரோனா தொற்றால் தற்போது பிரேஸிலே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேஷிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 232 பேர் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளனர்.

இதற்கமைய பிரேஸிலில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் பிரேஸிலில் புதிதாக 27 ஆயிரத்து 263 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த நாட்டில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 56 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.

பிரேஸிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவிலேயே நேற்றைய தினம் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த நாட்டில் நேற்று ஆயிரத்து 132 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் 21 ஆயிரத்து 203 பேர் புதிதாக கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தொற்றுறுதியாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 80 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 7 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 64  இலட்சத்து 73 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. 3 இலட்சத்து 81 ஆயிரத்து 706 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் உலகளவில் 29 இலட்சத்து 86 ஆயிரத்து 14 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: