செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்கும் எண்ணம் இல்லை – ஹவுதி போராளிகள் தெரிவிப்பு!

Saturday, January 20th, 2024

செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தான் குறிவைப்பதாகவும் யேமனின் ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அமெரிக்காவும், பிரித்தானியாவும் தமது இலக்குகள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் எனவும் கூறியுள்ளனர்.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஆகிய நாடுகளை ஹவுதி போராளிகள் இலக்கு வைத்துள்ளனர்.

தாம் சில விதிகளை வகுத்துள்ளதாகவும் ஒரு துளி ரத்தம் கூட சிந்தக்கூடாது எனவும் எந்த ஒரு சொத்துக்கும் சேதம் விளைவிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் ஹவுதி போராளிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மொஹமத் அப்துல் சலாம் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

எங்களது அழுத்தம் இஸ்ரேல் மீது மட்டுமே உள்ளது. வேறு எந்த நாட்டிற்கும் அழுத்தம் கொடுப்பது எங்கள் நோக்கம் அல்ல எனவும் சலாம் கூறியுள்ளார்.

இஸ்ரேல், காஸா மீது போரை ஆரம்பித்த பின்னர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகக் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் அமைப்பு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியது.

இந்த நிலையில், யேமனில் உள்ள ஹவுதி முகாம்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கூட்டாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த நிலையிலேயே ஹூதிகளின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: