மூன்று மணி நேரத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் – போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர்!
Thursday, February 13th, 2020
வாகன சாரதிக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தமது விண்ணப்பம், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த பின்னர் மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
வேரஹரவுக்கு சென்று யாரும் தமது நேரங்களை வீணடிக்க கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள ஏற்கனவே இருந்த டோக்கன் முறை மாற்றப்பட்டு இணையத்தின் ஊடாக மருத்துவம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான முன் அனுமதி பெறப்படும் முறை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சீருடைக்கான வவுச்சர் சீட்டுக்கள் இதுவரை கிடைக்கவில்லை - இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
முதன்முறையாக தெற்காசிய பிராந்தியத்திற்கான ஒன்றுகூடல் இலங்கையில் !
|
|
|


