சுற்றுலாப்பயணிகள் மீது தலிபான்கள் தாக்குதல்!

Friday, August 5th, 2016

மேற்கு ஆப்கானிஸ்தானில், இராணுவத் தொடரணியில் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பமியான் மற்றும் கோரிலிருந்து ஹெராட் மாகாணத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே, செஷ்ட்-இ-ஷரிஃப் மாவட்டத்திலே வைத்தே, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 12 பேரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு அறிக்கையொன்றின் மூலம் தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் பேச்சாளர் குவாரி யூசெஃப் அஹ்மடி தெரிவித்துள்ள போதும், இதை ஹெராட் ஆளுநர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

தலிபான்கள் குழுவொன்று சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி, குறைந்தது ஆறு பேரைப் காயப்படுத்தியதாக ஹெராட் ஆளுநரின் பேச்சாளர் ஜலானி ஃபர்கட் தெரிவித்துள்ளதோடு, எவரும் கொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆப்கானிஸ்தான் சாரதியும் காயமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: