காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டிற்கு ஆதரவு: சீனா!

Sunday, September 25th, 2016

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிக்கும் வகையில் வெளிநாடு எதுவும் செயல்பட்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிபோம் என்றும் காஷ்மீர் விவகாரத்தில் அந்நாட்டின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிக்கின்றோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

லாகூர் நகரில் பாகிஸ்தானிற்கான சீன தூதர் யூ போரன், பஞ்சாப் முதல் மந்திரி ஷாபாஸ் ஷெரீப்பினை சந்தித்து பேசினார்.  அதன் பின்னர் அவர் இத்தகவலினை தெரிவித்துள்ளார் என தி டான் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.  அவர், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். இனியும் இருப்போம் என கூறினார்.

இந்தியாவின் பிடியில் இருக்கும் காஷ்மீரில், ஆயுதங்களற்ற காஷ்மீரிகள் மீது நடைபெறும் தாக்குதல்களில் எந்த நியாயத்திற்குரிய விசயமும் இல்லை.  காஷ்மீர் விவகாரம் ஆனது காஷ்மீரிகளின் விருப்பங்களின்படியே தீர்வு காணப்பட வேண்டும் என கூறியுள்ளார்.  கடந்த செப்டம்பர் 18ல் உரி பகுதியில் ராணுவ தளத்தின் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தூதரக அளவிலான பதற்றங்கள் எழுந்தன.

இந்த தாக்குதலினை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடத்தினர் என இந்தியா குற்றம் சாட்டியது.  இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.  ஷாபாசின் 65வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த யூ, காஷ்மீரில் உள்ள சூழ்நிலையின் முன்னேற்றம் பற்றி ஆலோசனை நடத்தினார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கான (சி.பி.ஈ.சி.) பல்வேறு திட்டங்களின் வளர்ச்சி பற்றியும் பேசியுள்ளார்.  46 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (சி.பி.ஈ.சி.) இத்திட்டத்தின் ஒரு பகுதியானது விவகாரத்திற்குரிய பகுதியின் வழியே செல்வதனால் இத்திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Untitled-1 copy

Related posts: