சீனாவில் சுரங்க விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
Wednesday, June 12th, 2019
சீனாவின் ஜிலின் மாகாணத்தில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் அங்கு பணியாற்றிய 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று, சுரங்க இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related posts:
கைது விடயம் மன்னரின் சூழ்ச்சியா? பின்னணி தகவல்கள் வெளியாகின!
எல்லையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் - பலஸ்தீனத்தில் பதற்றம்!
முகத்திரை அணியும் பெண்களுக்கு அபராதம் – ஜேர்மனில் புதிய சட்ட வரைவு!
|
|
|


